2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட சிறுவர்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, குளங்களுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ சிறுவர்கள் குளிப்பதற்குச் செல்ல வேண்டாமென, கிளிநொச்சி மாவட்டச் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

மீள்குடியேற்றத்தின் பின்னர் அபிவிருத்திப் பணிகளுக்கென உருவாக்கப்பட்ட குழிகளில் தற்போது மழை வெள்ளம் தேங்கியுள்ளது.  இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் அதன் ஆழம் தெரியாமல், சிறுவர்கள் பலர் வௌ்ள நீர் நிரம்பிய குழிகளுக்குள் இறங்கி விளையாடியதில் உயிரிழந்துள்ளனர்.

எனவே, நிரம்பியுள்ள குளங்களுக்கோ அல்லது நீர் நிலைகளுக்கோ சிறுவர்கள் நாடிச் செல்ல வேண்டாமெனவும் இது தொடர்பாக, சிறுவர்களை பெரியோர்கள் வழி நடத்துமாறும், மாவட்டச் சுகாதாரத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்கள் பாடசாலை முடிந்தவுடன் குளங்களையும் நீர் நிலைகளையும் நாடிச்செல்லாது, வீடுகளுக்குத் திரும்புமாறும், மாவட்டச் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .