2024 மே 08, புதன்கிழமை

’குப்பை கிடங்கு இருப்பது தெரிந்தும் மக்கள் குடியேற்றம் செய்திருக்கிறார்கள்’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பம்பைமடு பகுதியில், குப்பை கிடங்கு இருப்பது தெரிந்தும், மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களெனக் குற்றஞ்சாட்டிய வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் து.நடராஜசிங்கம், பல வருடங்களுக்கு முன்னரே இருந்த குப்பை கிடங்குக்கு அருகில் வீட்டைக் கட்டுவதென்பது சரியான விடயமில்லையெனவும் தெரிவித்தார்.

வவுனியா - மன்னார் வீதி, புதிய சாளம்பைக்குளம் கிராமத்துக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைமேட்டை அகற்றுமாறு கோரி, அப்பகுதி மக்களால், நேற்று (22) காலை 6 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (23) 2ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு, நேற்று (23), கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X