2024 மே 08, புதன்கிழமை

குளத்து நீரை இராணுவத்தினர் பயன்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு உடையார்கட்டுக்குளத்தில் உள்ள நீரை, தேவைக்கு அதிகமாக இராணுவத்தினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் பயன்படுத்துவதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டு குளத்தின் கீழ் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை நிறைவு பெற்றுள்ள நிலையில், குளத்தில் தற்போதுள்ள நீரையும் வரட்சி நிலையினையும் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட அளவு நிலப்பகுதியில் சிறுபோக செய்கை மேற்கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது குளத்தில் உள்ள நீரை சிவில் பாதுகாப்பு படையினரும் இராணுவத்தினரும் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குளத்தின் நீர்மட்டம் மிகவேகமாக குறைவடைந்து வருவதாகவும், இதனால் குளத்தின் நீர் குறைந்து செல்வதுடன், இதனால் மீனவர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும் இதனை தடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட செயலர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X