2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாந்தபுரம் கலைமகள் பாடசாலைக்கு இரண்டு மாடி கட்டடம்

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்துக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில், இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக போதிய வகுப்பறை வசதிகளின்றி காணப்பட்ட பாடசாலைக்கு, கடந்த காலங்களில் வகுப்பறை கட்டடத்துக்கான எந்த நிதியும் ஒதுக்கப்படாத நிலையில், பாடசாலை அபிவிருத்திக் குழுவானது, நேரடியாக அதிபர் பெ. கணேசன் தலைமையில், வடக்கு மாகாணப் பிரதமச் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அவைமாக, அவரால் மாகாணம் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், 18.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று, புதிய இரண்டு மாடி கட்டடத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என,  பாடசாலையின் அதிபர் பெ. கணேசன்  தெரிவித்தார்.

சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதில்,  எவரும் போதிய அக்கறை காட்டாத நிலையில், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் பாடசாலைக் கல்விச் சமூகமும் இணைந்து இவ்வாறு பல பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், அவர்  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .