2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தடுப்பணை அமைக்குமாறு கோரிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்துக்குள் மழை வெள்ளம் பரவாமலிருக்கும் வகையிலான தடுப்பணை ஒன்றை அமைக்குமாறு, அக்கிராம மக்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1983ஆம் ஆண்டில், தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக்கிராமம் உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தின் தாழ்நிலப் பகுதிகளை நோக்கி, மழைக் காலத்தில் காட்டாறு வெள்ளம் பரவுவதால், அக்கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தொடங்கப்படும் அணையை, ஆனைவிழுந்தான் குளத்தின் அணையுடன் இணைப்பதன் மூலம், கிராமத்துக்குள் வெள்ள நீர் பரவாது தடுக்க முடியும் என்று, கடந்த முப்பது ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்ற போதிலும், இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் குறைந்த கிராமங்களில் ஒன்றாக இக்கிராமம் காணப்படுவதுடன், போக்குவரத்து, கல்வி, விவசாயம் உட்பட பல வசதிகள், இக்கிராமத்தில் இல்லை எனவும் வெள்ள நீரை கிராமத்துக்குள் பரவாமல் தடுப்பதன் மூலம், கிராமம் அபிவிருத்தி அடையும் எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .