2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’துண்டுப் பிரசுரங்களை நம்பி கடைகளைப் பூட்ட வேண்டாம்’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

போலியான துண்டுப் பிரசுரங்களை நம்பி, கடைகளைப் பூட்ட வேண்டாமென, கிளிநொச்சி வர்த்தகச் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிளிநொச்சி வர்த்தகச் சங்க உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கிளிநொச்சியில், ஆதனவரி செலுத்திய  தனியார் வர்த்தகர் ஒருவர், கரைச்சி பிரதேச சபையால்  ஆதனவரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டாமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டுமாறு, தலைவர், செயலாளர் ஆகியோரின்  கையெழுத்துகளின்றி, கிளிநொச்சி வர்த்தகச் சங்கத்தின் போலியான கடிதமொன்றை, குறித்த வர்த்தகரால் கிளிநொச்சியில் உள்ள சகல வர்த்தகர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்கள் சாடியுள்ளனர்.

எனவே, இக்கடிதம் போலியானதெனவும் வழைமப் போன்று கடைகளைத் திறக்குமாறும், கிளிநொச்சி வர்த்தகச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .