2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில், விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நெறிகளில் மாணவர்களை தெரிவு செய்து அவர்களை பயிற்சி நெறிகளில் இணைக்கும் ஆரம்ப நிகழ்வு, மன்னார்  நகரசபை மண்டபத்தில் நேற்று (01) மாலை நடைபெற்றது. 

மோட்டார் வாகன துறை, சுற்றுலாதுறை, சுகாதாரதுறை, கட்டுமாணத் துறை என பல் துறைகளில் பயிற்சிகளை பெற தகுதியுள்ள மாணவர்களை நேர்முக தோர்வு முலம் தெரிவு செய்து அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப்படையில் பயிற்சி நெறிகளை தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 

குறித்த ஆரம்ப நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், சிறப்பு விருந்தினராக மன்னார் மற்றும் மடு வலயகல்வி பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன், மத்திய வங்கியின் பிராந்திய உத்தியோகத்தர் திருமதி.கிறிஸ்றின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பயிற்ச்சி நெறிகளை ஆரம்பிக்க இருக்கும் 200 இளைஞர் வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

குறித்த பயிற்சி நெறிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய ரீதியில் சான்றிதல்களுடன் புதிதாக தொழில் தொடங்துவதற்கு 5 இலட்சம் ரூபாய் கடன் உதவியும் வழங்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .