2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நத்தாரன்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேவைகள்

க. அகரன்   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தாரன்று வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து பஸ் சேவைகளும் இடம்பெறும் என, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர், சேவைகள் எவையும் அங்கிருந்த இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன், வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பஸ் நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

வவுனியா பஸ் நிலையமானது பயன்பாடின்றி காணப்படுவது தொடர்பாக நாம் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

 

எனினும் அங்கிருந்து சேவைகளை மேற்கொள்ளவதற்கு இலங்கை போக்குவரத்து அதிகார சபை முன்வராத நிலையில், எம்மாலும் சேவையினை அங்கிருந்து செயற்படுத்த முடியாதிருந்தது.

 

இந்நிலையில் இன்று வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

 

இதன்போது தேசிய போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர், வட மாகாண போக்குவரத்து அதிகாரசைபயின் தலைவர் மற்றும் செயலாளர், வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியத்தினர், ஐந்து மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ,இலங்கை போக்குவரத்து சபையினுடைய 7 சாலை முகாமையாளர்கள் இப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தோம்.

 

இதன்போது, இறுதி முடிவாக அனைவரும் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது என, முடிவு எட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .