2024 மே 08, புதன்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன், எஸ்.நிதர்ஷன்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாகவே நல்லாட்சி அரசுக்கு எதிராக கொடும்பாவி எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது.

குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (22) அளவீடு செய்யப்படும் என காணி நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி, கடற்படை முகாமுக்கு முன்பாகவும் வட்டுவாகல் பாலதினூடான போக்குவரத்தை மறித்தும் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X