2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நாடாளுமன்றத்துக்கு பெண்கள் செல்வது மிகவும் குறைவு’

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

52 சதவீதப் பெண்களைக் கொண்ட இந்த நாட்டில், நாடாளுமன்றத்துக்குப் பெண்கள் செல்வது மிகவும் குறைவாகக் காணப்படுவதாக, வன்னி தேர்தல் தொகுதியில், காண்டாமிருக சின்னத்தில் சுயேச்சைக்குழு 20இல் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள அருள்வதான சுந்தரராஜ் தெரிவித்தார்.

முல்லைத்தீவில், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில், 11 தடவைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் மக்களின் பிரச்சினைகளை, அரசியல் தலைவர்கள் சரியாகக் கையாளாத காரணத்தால், மக்களுக்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டத்தை முன்னெத்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சுயேச்சைக் குழுவில் தான் போட்டியிடுவதாகவும், அவர் கூறினார்.

சுயேச்சைக் குழு என்றால் வாக்குளை உடைப்பதற்காக வந்துள்ளதென்று பலரும் தெரிவிக்கின்றனரெத் தெரிவித்த அவர், அதற்காகத் தாங்கள் வரவில்லையெனவும் தாங்கள் வெல்லாவிட்டால், தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கைகளுடன் பயணிக்கும் எந்தவொரு கட்சியுடனும் தாங்கள் இணைந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆனாலும், மக்கள் என்ன சொல்கின்றார்களோ அதனைச் செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக, அருள்வதான மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .