2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நாள் ஒன்றுக்கு 12,000 லீற்றர் பால் கொள்வனவு’

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் லீற்றர் பால் கொள்வனவு செய்யப்படுவதாக, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.கௌரிதிலகன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கால்நடை அபிவிருத்தி தொடர்பில் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது பண்ணையாளர்கள் திறந்த வெளிவளர்ப்பு முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மேச்சல் தரவை என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. தற்போது 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இதில் 6,000 வரையான கால்நடைகள் நல்லின கால்நடைகளாக காணப்படுகின்றன.

“தற்போது செயற்கை முறைச்சினைப்படுத்தல்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைவிட நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் லீற்றர் பால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யும் பாலின் விலை 65 ரூபாய் முதல் 70 ரூபாயாகக் காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .