2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரதியமைச்சரை வரவிடாமல் வாயிலுக்கு பூட்டுபோட்டனர் ஊழியர்கள்

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பிரதியமைச்சர் காதர் மஸ்தானை வரவேற்கும் நிகழ்வொன்று இடம்பெறவிருந்த முசலி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் பூட்டப்பட்டமையால், அங்கு சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

பிரதியமைச்சர் காதர் மஸ்தானை, முசலி மக்கள் வரவேற்கும் நிகழ்வு, ஆதரவாளர்களால், நேற்று (07) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான அனுதியை, ஏற்பாட்டுக் குழுவினர், பாடசாலை அதிபரிடமும் வலய கல்விப் பணிப்பாளரிடமும், எழுத்துமூலம் பெற்றிருந்தனர்.

குறித்த பாடசாலையில், வரவேற்பு நிகழ்வு நடத்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு, சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் குறித்த பாடசாலையில் பிரதான நுழைவாயில், சில சிற்றூழியர்களால் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டது.

இதனால், பாடசாலைக்குள் பிரதியமைச்சரை அழைத்துச் சென்று நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சிறு பதற்றம் நிலவியது.

இந்நிலையில் பிரதியமைச்சரின் வரவேற்பு நிகழ்வு, பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்றது.

முசலியில், தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதெனவும், பிரதியமைச்சர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .