2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மணல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தில், எவ்வித மணல் அகழ்வுக்கான அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, புவிச் சரிதவியல் அளவைப் பணியகத்தின் அதிகாரி தெ.கிஷாகரன் தெரிவித்தார்.  

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மணல் அகழ்வுக்கான அனுமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளனவெனவும் கூறினார். 

கடந்தாண்டு டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் முல்லைத்தீவு - ஐயன்கன்குளத்தில், மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதத்தில் இருந்து  எந்தவிதமான அகழ்வு அனுமதிகளும் வழங்கப்படவில்லை எனவும் கூறினார். 

கனியவளத் திணைக்களத்தின் அனுமதிகள் இன்றியே மணல் அகழ்வு நடைபெறுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .