2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் கழுதைகளுக்கு வைத்தியசாலை

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன், மன்னார், சின்னக்கரிசல், தாயிலான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகளுக்கான வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியன, இன்று (21) காலை திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிலையமானது, மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளைப் பராமரிக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நிலையத்தின் ஊடாக, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு, பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .