2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மழையிலும் தொல்பொருள் அகழ்வுகள் தொடர்கின்றன

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 நவம்பர் 19 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி பணி கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த மைதானத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு என 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இன்று (19) 4 ஆவது இடத்தில் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த அகழ்வு பணிகளின் போது 2 அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு சீன கண்ணாடி குவலை துண்டுகள், வளையல்கள், போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்துக்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதுக்கான நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது    நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன.

இதனால் தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை இடை நிறுத்தி அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .