2024 மே 08, புதன்கிழமை

முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் கால்நடைகள் நடைமுறை

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ், 12 மாதங்களும் பயிர்செய்கை நடைபெறுவதனால் கடந்த ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த அதே நடைமுறை இந்த ஆண்டு சிறுபோகத்திற்கும் கொண்டுவரப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குளத்தின் கீழான சிறுபோக செய்கை குழுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய செய்கையில் ஈடுபடுபவர்கள் வேலிஅமைக்கவேண்டும் என்று கால்நடையை வளர்ப்பவர்கள் ஆட்களை வைத்து கால்நடை வளர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உரிமையாளர்களுக்கான அறிவிப்பாக எருமை மாடு ஒன்றுக்கான பிடிகூலியாக ஐந்தாயிரம் ரூபாவும், 24 மணிநேர பராமரிப்பு செலவாக ஜநூறு ரூபாயும் பசுமாடு ஒன்றுக்கான பிடி கூலியாக ஆயிரம் ரூபாயும் பராமரிப்பு செலவாக 250 ரூபாயும் கால்நடை உரிமையாளரிடம் இருந்து அறவிடப்படும் என்றும் பயிரழிவை ஏற்படுத்தக்கூடிய கால்நடைக்கு பிடிகூலி 500 ரூபாயும் பராமரிப்பு செலவாக 125 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயிர் உரிமையாளர்கள் கால்நடையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு செல்லவேண்டும் பிடிக்கப்படும் கால்நடைகள் மிருகவதைக்கு உட்படும் பட்சத்தில், பயிர் உரிமையாளரிடம் இருந்து அதற்கான நட்டம் அறவிட்டு வழங்கப்படும்.

விவசாய செய்கைக்கு அழிவுகளை ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்தால் கமக்கார அமைப்புகள் ஊடாக அதனை உறுதிப்படுத்தி விவசாய போதன ஆசிரியருக்கும் விவசாய உத்தியோகத்தருக்கும் தெரிவிக்கம் இடத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒட்டுசுட்டான் விவசாய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X