2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முத்தையன்கட்டுக்குளம் மேட்டுச் செய்கைக்காவே உருவாக்கப்பட்டது’

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மேட்டுப் பயிர்ச் செய்கைக்காகவே, முத்தையன்கட்டுக்குளம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், எனவே, விவசாயிகள் உப உணவுப் பயிர்ச் செய்கையில் அதிக நாட்டத்தைச் செலுத்த வேண்டுமெனவும் கூறினார்.

முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான சிறுபோகப் பயிர்ச்செய்கைக் கூட்டம், நேற்று (18) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முத்தையன்கட்டுக் குளம் உருவாக்கப்பட்டதே மேட்டுப் பயிர்ச் செய்கைக்காகவேயாகுமெனவும் ஆனால் தற்போது நெற்செய்கைதான் கூடுதலாக மேற்கொள்ளப்படுகிறதெனவும் தெரிவித்தார்.

தற்போது, இந்தக் குளத்தின் நீர் மட்டம், 22 அடி 03 அங்குலமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், குளத்தின் நீரை விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், உலக வங்கியின் 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் இந்தக் குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .