2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைக் கடலில் மீன்பிடி வீழ்ச்சி

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவுக் கடலில், மீன்பிடி வீழ்ச்சி அடைந்துள்ளதாக கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, முல்லைத்தீவுக் கடலை நம்பி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 6,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியும் இந்திய றோலர்களும் வருகையும் அதிகரித்தமையால் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவுக் கடலில் மீன்பிடி குறைகின்றபோது நந்திக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை கொண்டு செலுத்தக்கூடிய நிலைமை முன்னைய காலங்களில் இருந்தது. எனினும் நந்திக் கடல் ஆழமாக்கப்படாமையால் அங்கும் தொழில் மேற்கொள்ள முடியாத நெருக்கடி காணப்படுகின்றது.

இதேவேளை, இராணுவத்தினர் அமைத்துள்ள வேலி காரணமாக கேப்பாப்புலவு, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை, நீராவிப்பிட்டி ஆகிய கிராமங்களின் கடற்றொழிலாளர்கள் நந்திக் கடலுக்குச் செல்வதில் தொடர்ச்சியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .