2024 மே 08, புதன்கிழமை

யுவதியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஊழியர்கள்

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

மேடை பற்றுச்சீட்டு எடுக்கத் தவறிய பெண்ணை, ரயில் நிலைய ஊழியர்கள் சிலர் அநாகரீகமான முறையில் நடத்திய சம்பமொன்று, கிளிநொச்சியில், இன்று (18) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு தனது தாயாரை அழைத்துக்கொண்டு வந்த குறித்த பெண், ரயிலில் தாயாரை ஏற்றிவிட்டு திரும்பும் போதும், அங்கிருந்த ரயில் நிலைய ஊழியர் ஒருவர், “மேடை ரிக்கட் எங்கே?” என வினவியுள்ளார்.

இதன்போது, தான் மேடை ரிக்கட் எடுக்கவில்லையென்றும், குறித்த நடைமுறையை தான் அறிந்திருக்கவில்லையென்றும் தெரிவித்த குறித்த பெண், இயலாத தாயை ரயிலில் ஏற்றிவிடவே உள்ளே வந்ததாகவும் கூறினார்.

இதன்போது அங்கிருந்த மற்றுமோர் ஊழியர், தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து, 3,020 ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண், அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X