2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரூ. 11 மில்லியனில் வாய்க்கால்கள் புனரமைப்பு

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் அணைக்கட்டு மற்றும் கல்மடுக் குளத்தின் நீர்விநியோக வாய்க்கால்கள் என்பன, 11 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வன்னேரிக்குளத்தின் கீழ் உள்ள 346 ஏக்கர் பயிர்செய்கை நிலங்களில், 115 வரையான விவசாயிகள் வருடாந்தம் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குளத்தின் அணைக்கட்டைத் திருத்தித் தருமாறு, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூன்று மில்லியன் ரூபாய் செலவில், இதன் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, கல்மடுக்குளத்தின் கீழான 3,450 பயிர்ச் செய்கை நிலங்களில், 1,025 வரையான விவசாயிகள் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த குளத்தின் நீர் விநியோகக் வாய்க்கால்கள் பல, இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், எட்டு மில்லியன் ரூபாய் செலவில், கண்டாவளை பிரதேசத்திலுள்ள வாய்க்காலின் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .