2024 மே 08, புதன்கிழமை

வவுனியாவில் போராட்டம்

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, வீதிஅபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்துக்கு, நேற்றுடன் (21) 1250ஆவது நாள்கள் பூர்த்தியடைந்தது. இதையொட்டி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (21)  முன்னெடுக்கப்பட்டது.  

எமக்கான தீர்வைத் தருமாறு வெளிநாடுகளிடம் நாம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். எமது பிரச்சினையை பார்க்காமல் தேர்தல் தேர்தலென அனைத்து கட்சிகளும் அலைகின்றன. வாக்குகளைக் கேட்டு, வீட்டுக்கு வீடு, கூட்டமைப்பினர் இரவிரவாகச் செல்கின்றனர் எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,  எமது பிரச்சினைக்குத் தீர்வை கண்டிருந்தால், வீடுகளுக்குச் செல்லவேண்டியதில்லை என்றனர்.

அவர்களுக்கே மீண்டும், மீண்டும் நாங்கள் வாக்களித்தால் இன்னும் ஐந்துவருடங்கள் வீதிகளிலேதான் நாம் இருக்கவேண்டுமெனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களவர்களை பிரியப்படுத்துவதாகவே உள்ளது என்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X