2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வியாபாரமாக மருத்துவத்துறை மாறுவதற்கு அரசியல்வாதிகளும் காரணமாகின்றனர்’

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மருத்துவத் துறையனது, வியாபாரமாக மாறுவதற்கு, எமது அரசியல்வாதிகளும் காரணகர்த்தாக்களாக உள்ளனரென, வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தின நிகழ்வுகள், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில், இன்று (21) நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மதுபானசாலை அமைப்பதென்றால், இறுதியாக ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்ற சட்டம் காணப்படுகின்ற நிலையில், எவருடைய அனுமதியுமின்றி மருந்தகங்களையும் சிகிச்சை நிலையங்களையும் உருவாக்கலாமென்ற நிலைப்பாடு, தற்பபோது காணப்படுகின்றதெனத் தெரிவித்தார்.

தனது காலப்பகுதியில், இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், இவ்வாறான விடயங்களுக்கு, பேரினவாத அரசியல்வாதிகளே ஆதரவளிப்பதாகப் பலர் தெரிவித்து வருகின்றனரெனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், எமது அரசியல்வாதிகளும் இதற்குத் துணைப்போகின்றார்களென, சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .