2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீரபுரம் மணிவாசகரில் ஆசிரியர் பற்றாக்குறை; மீண்டும் போராட்டம் வெடித்தது

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களாலும் பெற்றோர்களாலும், இன்று (26), மீண்டும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதனால், அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. 

 குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாகுறை நிலவுவதாகத் தெரிவித்து, திங்கட்கிழமை (24), பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

மறுநாள் செவ்வாய்க்கிழமை (25), பெற்றோர்கள், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமையால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், இன்று (26) காலை, ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக் கோரி, நெளுக்குளம் - நேரியகுளம் பிரதான வீதிக்கு முன்பாக ஒன்றுகூடிய பெற்றோர்களும் மாணவர்களும், வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்
மு. இராதாகிருஷ்ணனுடன் பெற்றோர்கள் முரண்பட்டனர்.

அத்துடன், அவரது வாகனத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.  

 வெள்ளிக்கிழமைக்கு (28) முன்னர், குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியப்பதாக, வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

 குறித்த போராட்டம் காரணமாக, நெளுக்கும் - நேரியகுளம் வீதிக்கான போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .