2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'வீரபத்திரர் வசந்தன் கூத்து'

Menaka Mookandi   / 2011 மார்ச் 26 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'யாழ்ப்பாண இசை விழா 2011', யாழ். மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் பலதரப்பட்ட பாரம்பரிய இசை, நடன நிழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தமிழர் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான வீரபத்திரர் வசந்தன் கூத்து மேடையேற்றப்பட்டது.

வீரபத்திரர் வசந்தன் கூத்தானது யாழ்.கட்டுவன் பிரதேச மக்களால் ஆடப்படும் கூத்தாகும். சுமார் 200 வருடங்கள் பழமையான இக்கூத்து உழவுத் தொழிலை பிரதிபலிக்கின்றது. உழவுத் தொழிலின் ஆரம்பம் முதல் இறுதி வரையான அம்சங்கள் இக்கூத்தில் எடுத்தியம்பப்படுகின்றன.

ஆணி, ஆவணி மாதங்களில் வட்டக் களறியில் இக்கூத்தை அரங்கேற்றுவார்கள். இக்கூத்தில் 24 வரையான பாடல்கள் உள்ள  நிலையில்இ இரவு வேளைகளில் ஆரம்பித்து விடியும் பொழுது வரை இக்கூத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .