2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதித்தோருக்கு சேவை வழங்க ‘தயங்க வேண்டாம்’

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரதராஜன் யுகந்தினி  

“அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு, அரச அதிகாரிகள் தயங்காமல் தங்களது தீர்மானங்களை எடுங்கள். உங்கள் பின்னால் ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கின்றனர்” என, அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான சேவைகளை இன, மத பேதங்கள் ​பார்க்காமல் செய்யவேண்டும்.  

இந்த விடயத்தில், இராணுவத்தினர் மிகவும் பாரியதொரு சேவையைத் தற்போது வழங்கிக்கொண்டு இருக்கின்றனர்.   

அரச ஊழியர்களும், தங்களது சேவைகளை வழங்குவதற்கு சுற்றுநிருபங்களைப் பார்த்துக்கொண்டு இருக்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து தனது சேவைகளை வழங்குங்கள். உங்களின் பின் ஜனாதிபதியும், பிரதமரும் உள்ளனர்” என்றார்.  

இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுசெயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம்,  

“இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட, சிறிய வியாபார நிலையங்களுக்குத் தேவையான கடன் வசதிகளை, வங்கிகளுடன் கலந்தாலோசித்து வழங்குவதற்கு எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் தீர்மானம் எடுக்கப்படும்.   

அனர்த்தங்களினால், தங்களுடைய கல்வியைத் தொடர்வதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களை விரைவாக மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான தேவை உள்ளது. களுத்துறை மில்லனிய பிரதேசத்தில், 4,228 மாணவர்கள் தங்களது கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.  

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு, ​​ஒரு மாவட்டத்துக்கு ஒரு வங்கி என்ற அடிப்படையில், சேவைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .