2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் இரு பாடசாலைகள் ஆரம்பம்

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வவுனியாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தமிழ்மிரர் இணையதளத்திற்கு வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று  தெரிவித்தார்.

காமிணி மகா வித்தியாலயத்திலும், நெலுக்குளம்  மகா வித்தியாலயத்திற்கு அருகிலும்  இப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை திறந்துவைக்கப்பட்ட இவ்விரு  பாடசாலைகளிலும் சுமார் 1500 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கல்வியமைச்சு, மாகாணசபை ஆகியன வழங்கியுள்ளன என்றும் யுனிசெப் அமைப்பு பாடசாலைகளை அமைப்பதற்கான கூரைகளையும், உலக உணவுத் திட்டம் மதிய உணவுப்போஷனம் ஆகியவற்றை வழங்குவதாகவும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் இந்த மாணவர்களுக்கான கல்வி பணிகளை மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .