2024 மே 09, வியாழக்கிழமை

இராணுவத்திலிருந்து தப்பியோடிய அறுவர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜூட் சமந்த)

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெண்ணொருவரிடம் தம்மை இண்டர்போல் அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு மிரட்டிய குற்றச்சாட்டில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை, கடுவெலை, தெமட்டகொட, கொச்சிகடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்படி பெண்ணின் வீட்டுக்கு, வெள்ளை நிற டிபெண்டர் ரக வாகனமொன்றில் வந்த 6 பேர் தாம் இண்டர்போல் அதிகாரிகள் எனக்கூறியதுடன் அப்பெண்ணின் வீட்டை சோதனையிட வேண்டும் எனவும் கூறினராம்.

துபாயில் பணியாற்றிய அப்பெண் சில தினங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார். களவாடப்பட்ட நகையொன்று அப்பெண்ணிடம் இருப்பதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதென மேற்படி நபர்கள் கூறினர்.

அதன்பின் அவ்வீட்டிலிருந்து 1,020,000 ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துக்கொண்ட சென்ற நபர்கள் கொழும்பிற்கு வந்து தம்மை சந்திக்குமாறு அப்பெண்ணிடம் கூறினார். அங்கு தம்மை சந்தித்த பெண்ணிடம் இவ்விடயத்தை  முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தொகை பணம் தமக்கு வழங்க வேண்டும் எனக் கூறினர்.

இதற்காக வங்கிக் கணக்கிலிருந்து  475,000 ரூபா பணத்தையும் மீளப்பெற்ற அப்பெண், பின்னர் சட்டத்தரணியொருவரின் ஆலோசனையை நாடினார். சட்டத்தரணியின் ஆலோசனைக்கமைய சிலாபம் பொலிஸ் அத்தியட்சகரிடம் அப்பெண் புகாரிட்டதையடுத்து சிலாபம் குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X