2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 19 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பற் கமின்ஸ், மிற்செல் ஸ்வப்ஸனை மிற்செல் மார்ஷ், கமரொன் கிறீன், ஜஹை றிச்சர்ட்ஸன் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.

இலங்கை சார்பாக தனுஷ்க குணதிலகவை நிரோஷன் டிக்வெல்ல பிரதியிட்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஆரம்பத்திலேயே டேவிட் வோர்னரை துஷ்மந்த சமீரவிடம் இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் மிற்செல் மார்ஷையும் டுனித் வெல்லலாகேயிடம் இழந்திருந்தது.

இந்நிலையில், பின்ஞ்சுடன், மர்னுஸ் லபுஷைன் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 29 (36) ஓட்டங்களுடன் ஜெஃப்ரி வன்டர்சேயிடம் வீழ்ந்ததோடு, உடனேயே பின்ஞ்சும் 62 (85) ஓட்டங்களுடனும் வன்டர்சேயிடம் வீழ்ந்தார்.

பின்னர் அலெக்ஸ் காரியும், ட்ரெவிஸ் ஹெட்டும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 49 (52) ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவிடம் காரி வீழ்ந்தார்.

தொடர்ந்து கிளென் மக்ஸ்வெல்லின் 33 (18) மூலம் ஓட்டங்கள் வேகமாகச் சேகரிக்கப்பட்டதுடன், அவர் வன்டர்சேயிடம் வீழ்ந்தபோதும் ட்ரெவிஸ் ஹெட்டின் ஆட்டமிழக்காத 70 (65) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .