2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மக்களுக்குச் சேவையாற்றும் அமைச்சராக திகாம்பரம் திகழுகிறார்’

Editorial   / 2017 மே 27 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய அமைச்சராகவும் தலைவராகவும் திகாம்பரம் திகழுகின்றார்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான  பழனி திகாம்பரத்தின்  இவ்வருடத்துக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில், நோர்வூட் - கிளங்கன் மேற்பிரிவு தோட்டப்பாதையைப் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கென்று விசேடமாக சேவையாற்றக்கூடிய அமைச்சைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் திகாம்பரம், கடந்த 2 வருடகாலத்துக்குள் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மக்கள் மனதில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழுகின்றார்.

இரண்டு வருட காலத்துக்குள் 2000 வீடுகளை நிர்மாணித்துள்ளதோடு இவ்வருடமும் ஆயிரக்கணக்கான வீடுகளை அமைப்பதற்கான அடித்தளத்தினை மேற்கொண்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமின்றி பெருந்தோட்ட மக்கள் வாழுகின்ற 12 மாவட்டங்களிலும் இவரின் சேவை தொடர்கின்றது. வீடுகளை அமைப்பதோடு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த  காலங்களில் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு சுகபோகங்களை அனுபவித்தவர்கள், இன்று காழப்புணர்வு நிலைக்கு உள்ளாகியுள்ளனர். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது சேவைகளை மக்களுக்கு வழங்குவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .