2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

George   / 2017 மே 20 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“பொருளாதார ரீதியில் பலமான நாட்டை கட்டியெழுப்புதல்" எனும் தொனிப்பொருளில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (19) மாலை நடைபெற்றது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், யாழில் அபிவிருத்தி, பொருளாதார கட்டமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றினை முதன்மையாக கொண்டு ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வலி.வடக்கின் மீள்குடியேற்றம், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக விஸ்தரிப்பு போன்றவை தொடர்பாக ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் ஏற்றுமதிகள் ஊடாக அன்னியச் செலாவணியை அதிகரிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.

புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல், புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குதல், முதலீட்டாளர்களுக்கான சலுகை மற்றும் ஊக்குவிப்பு போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இவ்விடயங்கள் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல, யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பல்கலைக்கழக துணைவேந்தர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .