2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பால்மா விவகாரம்: அமைச்சர் அதிரடி

Freelancer   / 2022 நவம்பர் 27 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த ஒருமாதத்துக்கும் மேல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார். 

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை சுங்கம் மறுத்துள்ளது.

அந்நிய செலாவணியை சட்டவிரோதமாக கையாள்கின்றமை குறித்து பால்மா நிறுவனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளால் பால்மா இறக்குமதி 50% குறைந்துள்ளதாகத் தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, பால்மா இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு சில டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .