2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“மல்லியப்பூ மக்களுக்கு தற்போதுதான் விடிந்துள்ளது”

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


 “ஹட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்கு அமரர் சந்திரசேகரன், வீடமைப்புத் திட்டத்தை வழங்கி, அந்த மக்களைக் கௌரவப்படுத்தினார். ஆனால், அதற்கு பின்பு இந்த மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. இன்று இந்தத் தோட்ட, மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை வைத்து, எம்முடன் இணைந்துள்ளனர். தற்போதே அம்மக்களின் வாழ்வில் விடியல் ஏற்பட்டுள்ளது” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் மல்லியப்பூ தோட்டப் பாதை, மத்திய மாகாண முதலமைச்சரின் விசேட பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் வேண்டு கோளுக்கிணங்க 5 இலட்சம் ரூபாய் நிதியில்  செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்காக, திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சினூடாக, மல்லியப்பூ தோட்ட ஆலய புனரமைப்புக்காக, 10 இலட்சம் ரூபாய் நிதி, கடந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம், 5 கோடி ரூபாய் செலவில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தோட்டத்துக்கான நுழைவாயில் பாதை, எனது முயற்சியினால் முறையாக செப்பனிடப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .