2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 31 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை, இதே தொடரில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் பஸல்ஹக் பரூக்கி, 15ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இது தவிர, குறித்த தொடரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. வனிடு ஹஸரங்க, 3. பஸல்ஹக் பரூக்கி, 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. அடில் ரஷீட், 6. அடம் ஸாம்பா, 7. சாம் கர்ரன், 8. முஜீப் உர் ரஹ்மான், 9. அன்றிச் நொர்கியா, 10. மிற்செல் சான்ட்னெர்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 68 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் றீலி றொஸோ, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சூரியகுமார் யாதவ், 2. மொஹமட் றிஸ்வான், 3. டெவோன் கொன்வே, 4. பாபர் அஸாம், 5. ஏய்டன் மார்க்ரம், 6. றீலி றொஸோ, 7. முஹமட் வஸீம், 8. டேவிட் மலன், 9. ஆரோன் பின்ஞ், 10. ஜொஸ் பட்லர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கெதிரான தொடரில் 72 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் ஷடாப் கான், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. ஹர்டிக் பாண்டியா, 3. மொஹமட் நபி, 4. ஷடாப் கான், 5. வனிடு ஹஸரங்க.

இதேவேளை இந்தியாவுக்கெதிரான இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பா, ஒன்பதாமிடத்திலிருந்து மூன்றிடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜொஷ் ஹேசில்வூட், 2. ட்ரெண்ட் போல்ட், 3. மொஹமட் சிராஜ், 4. மிற்செல் ஸ்டார்க், 5. ரஷீட் கான், 6. அடம் ஸாம்பா, 7. ஷகீன் ஷா அஃப்ரிடி, 8. முஜீப் உர் ரஹ்மான், 9. ஷகிப் அல் ஹஸன், 10. மற் ஹென்றி.

இந்நிலையில், குறித்த போட்டியில் 30 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றோஹித் ஷர்மா, துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. றஸி வான் டர் டுஸன், 3. குயின்டன் டி கொக், இமாம்-உல்-ஹக், 5. ஷுப்மன் கில், 6. டேவிட் வோர்னர், 7. விராட் கோலி, 8. றோஹித் ஷர்மா, 9. ஸ்டீவ் ஸ்மித், 10. பக்கர் ஸமன்.

இதேவேளை, நெதர்லாந்துக்கெதிரான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 18 ஓட்டங்களைப் பெற்ற சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா, ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. ரஷீட் கான், 4. மிற்செல் சான்ட்னெர், 5. சிகண்டர் ராசா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .