2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தீவிரமடைந்து வரும் ‘குரங்கு அம்மை‘ பாதிப்பு; எச்சரிக்கும் மருத்துவர்கள்

Ilango Bharathy   / 2022 மே 12 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் அண்மைக்காலமாகக்  குரங்கில் இருந்து பரவும் அம்மை நோயானது( Monkey-pox)வேகமாகப்  பரவி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் இருந்து பிரித்தானியா வந்த நபர் ஒருவருக்கு இந் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த  நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரித்தானியாவைச் சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ” குரங்கு அம்மை ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகும்.  இது மனிதர்களிடையே எளிதில் பரவாது.

பெரும்பாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில வாரங்களில் குணமடையும். இருப்பினும், சில சமயங்களில் இது கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தலாம் ” என்றனர்.

குரங்கு அம்மை நோய், பிரித்தானியாவில் முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .