Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 07 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, குணமடைய வேண்டி, அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம மகா பன்சலையில் விஷேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஸ்ரீ விஜயராம மகா பன்சலையில் வணக்கத்துக்குரிய அதிபீடாபதி வனஸ்ரீ பூஜித தேவகொட சரணநாக தேர, அக்கரைப்பற்று மாணிக்கப் பிள்ளையார் கோவிலின் பூசகர், தமிழ், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் செயலாளரும் கமத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவின் பணிப்பின் பேரில், அகில இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பேசும் இளைஞர்களின் இணைப்பாளர் திரு. ஸ்ரீதரனின் ஆலோசகர்
எம். ஜுனைடீனும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சுகநலம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இதில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில், கிராம உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜுனைதின் ஆகியோரும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .