2021 மே 14, வெள்ளிக்கிழமை

தனியார் வகுப்பு, முன்பள்ளிகளை மூடுமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம். ஹனீபா

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்கள், குர்ஆன் மத்ரசாக்கள் மற்றும் முன்பள்ளிப் பாடசாலைகள் ஆகியவற்றை இன்று வெள்ளிக்கிழமை (13) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளை,  ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம்  தீர்மானித்துள்ள நிலையில், இக்காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, பொத்துவில் பிரதேச சபைகுட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மீறி, யாராவது வகுப்புகளை நடத்தினால் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெ, அவர்  அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .