Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுநூலகங்களின் வாசிப்புப் பிரிவுகளை தினசரி மாலை 06 மணிவரை திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இதுவரைகாலமும் மாலை 4.30 மணிக்கு மூடப்பட்டுவந்த கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, கரைவாகு மேற்கு ஆகிய பொதுநூலகங்களின் வாசிப்புப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலை 08 மணியிலிருந்து மாலை 06 மணிவரை திறந்திருக்கும்.
வாசகர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தான் விடுத்த பணிப்புரைக்கமைய சம்மந்தப்பட்ட பொதுநூலகங்களின் நூலகர்கள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .