2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் கல்முனை மாநகரசபை விண்ணப்பப்படிவம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம். றம்ஸான்)

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாநகர சபையின் கீழ் பதிவுசெய்து, ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தை பெறவேண்டியது கட்டாயமானதாகும்.

இதற்கமைய  புதிதாக ஆரம்பித்துள்ள வர்த்தக நிலையமொன்றை பதிவுசெய்வதற்காக கல்முனை மாநகர சபைக்குச் சென்ற ஒருவர், அங்குள்ள பொறுப்பதிகாரியிடம் பதிவுக்குரிய விண்ணப்பபடிவத்தை பெற்றுக் கொண்டார்.

படிவத்தை பூரணப்படுத்துவதற்காக விரித்துப்பார்த்த வேளையில் அதில் என்ன இருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ள முடியாது அவர் திக்குமுக்காடிப்போயுள்ளார்.

இந்த நவீன கனிணித் தொழில்நுட்ப யுகத்தில் அதுவும் ஒரு மாநகர சபையின்  வர்த்தக நிலையங்களை பதிவு செய்வதற்கான  அனுமதிப் பத்திரத்தை இவ்வாறு அச்சிட்டு விநியோகிப்பது குறித்த அவ்வர்த்தகர் கவலை தெரிவித்துள்ளார்.

மாதிரி விண்ணப்பப்படிவத்தின் பிரதியை இங்கு காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .