2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நெல் கொள்வனவு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நெல் சேமித்து வைக்கும் களஞ்சியத்தை திறந்து வைப்பதனையும் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைப்பதனையும் படங்களில் காணலாம். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோர விவசாய சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.ஜுனைதீனும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு விவசாயிடம் இருந்து ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ வீதம்  சம்பா ஒரு கிலோ 30 ரூபாவிற்கும் நாட்டரிசி ஒரு கிலோ 28 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .