2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

குப்பை, வடிகாண்களின் துர்நாற்றத்தால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.

எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை, மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகிய இரு பிரபல்யமான பாடசாலைகள் அமைந்துள்ள ஒரு கிலோ மீற்றர் நீளமான ஸாஹிறா வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயணிக்கின்றனர். இப்பாதை ஏற்கனவே மிக மோசமான நிலையில் காணப்படும் வேளையில் இவ்வீதியின் காண்களும் சுத்தமான நிலையில் இல்லை.

இது தொடர்பாக மஹ்முத் மகளிர் கல்லூரியின் மாணவியொருவர் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் வழமையாக பாடசாலைக்குச் செல்லும் போது மூக்கைப் பொத்திக் கொண்டு பாடசாலைக்குள் செல்வதுடன் வகுப்பில் இருக்கும் போது துர்நாற்றம் தங்கமுடியாதுள்ளது. நுளம்புத்தொல்லை, குப்பைகளைக்கிளரும் நாய், காகங்களின் சத்தம் போன்றவற்றால் நிம்மதியாக இருந்து படிக்கமுடிவதில்லை என்றார்."

இவ்விடயம் தொடர்பா ஆசிரியர் எஸ்.இம்தியாஸ் கூறுகையி,

"மாணவர்களின் கல்விச் சூழல் என்றும் நன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மாணவர்கள் நல்ல மனதுடன் கல்வியைக் கற்பார்கள். பாடசாலையின் அருகில் உள்ள இக்காணுக்குள் அசுத்தமான நீரையும்இ குப்பைகளையும் இடுவதால் மாணவர்கள் மட்டுமல்ல நாங்களும் கூட தினமும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றார்."

இது தொடர்பாக மஹ்முத் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி அமிரா லியாக்கத்அலி கூறுகையில், "கல்முனை மாநகர சபைக்கு முதலிருந்த அதிபர் இது தொடர்பாக அறிவித்ததாகவும் அதற்கு முன் இருந்த மேயர் வந்து நேரில் பார்த்ததாகவும் பின் மாநகர சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குற்றம்சாட்டினார்.

கல்முனை மாநகர சபையின் பிரதிமேயர் ஏ.ஏ.பஷீர்இ மாநகர சபையின் ஆணையாளர் எம்.வை.சலீம் ஆகியோரிடம் வினவியபோது பாடசாலையிலிருந்து எவ்வித கடிதமும் எமக்கு கிடைக்கவில்லை. இது பொய்யான குற்றச்சாட்டாகும்.  கல்முனை மாநகர சபையினால் ஒவ்வொரு வாரமும் அவ்வீதியில் உள்ள குப்பைகள் அகற்றப ;படுகின்றன. அண்மையில்தான் மாநகர சபையால் பாடசாலைக்கு அருகில் உள்ள காண் துப்பரவு செய்யப்பட்டது.

குப்பைகளைப் போபோடும் பெற்றோரின் பிள்ளைகளே இப்பாடசாவையில் படிப்பதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பாடசாலையால் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே தீர்வாகும்" எனக் கூறினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .