2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

கடலில் குளித்த மாணவனைக் காணவில்லை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்.)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணி இடம்பெற்று வருவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் உயர்தரம் கணிதப் பிரிவில் முதலாம் ஆண்டு கற்கும் து.அனோஜன் (17 வயது) என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாண்டிருப்பு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மேற்படி மாணவன் இரு மாணவர்களுடன் கல்முனை மாமாங்க பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள கடற்பரப்பில் குளித்துக்கொண்டிருந்தபோது மேற்படி மாணவன் அலையினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனை தேடும் பணி இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .