2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

குடிநீர் பெறுவதற்கான பற்றுச் சீட்டுகளை மாகாண சபை உறுப்பினர் வழங்கிவைப்பு

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீரை பெற முடியாத வசதி குறைந்த குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து குடி நீரை பெறுவதற்கான பற்றுச் சீட்டுகளை  இன்று வழங்கிவைத்தார்.

சாய்ந்தமருதிலுள்ள தனது காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குடிநீர் வசதி பெறமுடியாதிருந்த 200 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமிலினால் குடிநீர் இணைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .