2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

காரைதீவு ஆர்.கே.எம். மகளிர் வித்தியாலயத்தில் டெங்கொழிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தேசிய டெங்கொழிப்பு வாரத்தையொட்டி, காரைதீவு ஆர்.கே.எம். மகளிர் வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை சிரமதான நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

மேற்படி சிரமதான நடவடிக்கையை பாடசாலை அதிபர் எஸ்.மணிமாறன் ஆரம்பித்து வைத்தார். பாடசாலை மாணவிகளும் ஆசிரியர்களும் இந்த சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி டெங்கொழிப்பு செயலணியின் அறிவுறுத்தலுக்கிணங்க தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  அந்த வகையில், கடந்த 23ஆம் திகதி முதல் டெங்கொழிப்பு வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .