2021 ஜூலை 26, திங்கட்கிழமை

திருக்கோவிலில் சுற்றிவளைப்பு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் கோவிலிருந்து, திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையான  கடற்கரை பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு  காலை 5 மணிக்கு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  

வீடு வீடாகச் இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடந்த  18 மாதங்களின் பின்னர் இப்பாரிய சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. மக்கள்
பீதியடைந்துள்ளனர். .

இதேவேளை, போக்குவரத்துக்கள் மற்றும் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .