2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

அம்பாறையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் தொடர்பாக விழிப்பூட்டல் செயலமர்வு  நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

சமுர்த்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.லாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 170 உத்தியோகத்தர்களும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் கணனி பாடநெறியினை பூர்த்திசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X