2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

பிரதேச சபையின் புதிய சபை அமர்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் மற்றும் சம்பிரதாயபூர்வ சபை அமர்வு ஆகியவை இன்று காலை பிரதேச சபைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளுக்கு முன்னதாக, தவிசாளர்  மற்றும் உறுப்பினர்கள் அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேச சபை செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பதவியேற்பு வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல் மற்றும் கே.எம். அப்துல் ரஸாக் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .