2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

சம்மாந்துறை பிரதேச சபையின புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று பிற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாட் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது,  புதிய தவிசாளர் எதிர்கால திட்டங்கள் குறித்து  உரையாற்றினார்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,  பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதேச சபையின் உறுப்பினர்களான பீ.எம்.றியால்,  அச்சு முகம்மது, ரி.திவாகரன்,  பிரதேச சபையின் ஊழியர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள்,   கல்விமான்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்கள்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X