Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கடந்த வருடம் க.பொ.த சா/ த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்களுக்குமான இலவச தலைமைத்துவ வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை கல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில், இந்தியாவின் சென்னை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த குமாரன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி எம்.ஐ.எம். கலீல் அல்- ஸிம்மிஸ், கெம்பஸ் நிறுவனத்தின் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
கல்முனை பஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள இந் நிறுவனத்தில் இன்று முதல் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ள முடியும். இந்நிகழ்வின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இக் கருத்தரங்கு தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள கலாநிதி எஸ்.எல்.றியாஸ் 077- 4056741 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago