2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பாசன வசதிகளுக்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சம்புக்களப்பு பிரதேச காணிகளின் பாய்ச்சல், வடிசல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு முறையான பாசன வசதிகளை வழங்குவதற்காக கிழக்கு மாகாண நீர்பாசன அமைச்சு 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

கடந்த 50 வருட காலமாக முறையான பாசன வசதியின்றி கைவிடப்பட்ட நிலையில்  காணப்படும் சுமார் 9,500 ஏக்கர் நெற்காணிகள் பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும் செய்கைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புக்கள் ஏற்படும் என கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக அபிவிருத்தி வங்கி என்பவற்றின்  நிதி உதவியின் மூலமே மேற்படி பாசனத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .