2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்" எனும் தொடர் நிகழ்ச்சித் திட்டம்

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

"நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்" எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள்  நிவாரண தொடர் நிகழ்ச்சித் திட்டம் கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத், கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.

இளைஞர்களை  எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் இளைஞர் குழுக்களை அமைப்பதன் ஊடாக எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

நேற்றும், இன்றும் நடைபெற்ற நிகழ்வுகளில் சமுர்த்தி அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகளும், மதத்தலைவர்களும்  வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், நிகழ்வுகளில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .